Saturday, July 27, 2019

காசி தும்பை



ஆங்கில பெயர்கள்

Balsam
Impatiens
Jewel weed
Ladies slippers
Spotted snap weed




இந்தியா மற்றும் பர்மாவை தாயகமாகக் கொண்டது.



சிகப்பு, இளம் சிவப்பு, ஊதா,என பல நிறங்களில் பூக்கும் இயல்பு கொண்டது.



முற்றிய காய்களை தொட்டவுடன் வெடித்து விதைகள் சிதறும். எனவே இதை ஆங்கிலத்தில் touch me not, impatiens என்றும் அழைக்கின்றனர்.

Thursday, July 25, 2019

செம்மந்தாரை




ஆங்கில பெயர்கள்

Orchid tree
Pink butterfly
Camel's foot

மாற்று பெயர்கள்

மலை ஆத்தி
நிலத் திருவாத்தி



சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல நிறங்களில் பூக்கும். பட்டையான காய்களை கொண்டது. இலைகள் மாட்டின் கால் தடத்தை ஒத்திருக்கும்.

சிறப்பு தபால் தலையை வெளியிட்டு இந்திய அரசு இதை சிறப்பித்துள்ளது

இதன் பூ, இலை, பட்டை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
'மந்தாரை உள்ளவரை நொந்தாரை காண முடியாது' என்று கூறுவர். வாழை இலையைப் போலவே மந்தாரை இலையில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.






மந்தாரை இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் தையல் இலைகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

மந்தாரை இலைகளை காயவைத்து நீரில் ஊறவைத்து ஈர் குச்சிகளால் இலைகளாக தைக்கப்பட்டு சமன் செய்யப் படுகிறது.

பதப்படுத்தப்பட்ட மந்தாரை இலைகள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.



கணபதியும் மந்தாரையும்

https://thiruppathigam.blogspot.com/2019/06/blog-post_26.html

புளியாரைக் கீரை


மஞ்சள் புளியாரை


ஆங்கில பெயர்கள்

Yellow wood sorrel
Oxalis stricta
Window box wood sorrel

மாற்று பெயர்கள்

சிறு புளியாரை
புளிச்ச கீரை
புளியா கீரை



மஞ்சள் புளியாரை ஆரை கீரை குடும்பத்தைச் சேர்ந்தது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.


Oxalis அமிலம் அதிகமாக உள்ளதால் பச்சையாக சாப்பிட கூடாது. குறிப்பாக குழந்தைகளுக்கு நல்லதல்ல. கீரையை வதக்கி துவையலாக செய்து சாப்பிடலாம்.



காய்கள் சின்னஞ்சிறு வெண்டைக்காயை ஒத்திருக்கும். கடுகு போன்ற சிறிய விதைகள் மூலம் பரவும்.







பெரும் புளியாரை



ஆங்கில பெயர்

Pink wood sorrel
Purple oxalis
Sour sob
Creeping oxalis
Wood sorrel



பூக்களின் நிறம், இலைகளின் அமைப்பு மற்றும் அளவுகளில் மாறுபட்டு இருப்பது பெரும் புளியாரை.



மற்றபடி சுவை, மருத்துவ பண்புகள் போன்றவற்றில் சிறு புளியாரையை ஒத்துள்ளது.

Friday, July 12, 2019

மஞ்சள் அரளி



ஆங்கில பெயர்கள்

Yellow oleander
Luck nut
Cook tree
Mexican oleander
Be still tree
Dicky plant.

மாற்று பெயர்கள்

விஷ அரளி
சாவு அரளி





மெக்சிகோவை தாயகமாகக் கொண்டது. இதில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வகைகள் உள்ளன.





இந்த குறுமரத்தின் எல்லா பகுதிகளிலும் குறிப்பாக இதன் பால் மற்றும் விதைகளில் Cardiac glycosides என்ற விஷப் பொருள் உள்ளது. பூக்கள் மட்டுமே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.





அலங்கார செடியாக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் இவை Sound pollution ஐ தடுக்க கூடிய தன்மை கொண்டவை.





இதன் அறிவியல் பெயர் Cascabel thevetia. இதில் Cascabel என்ற சொல்லுக்கு ஸ்பேனிஷ் மொழியில் கட்டுவிரியன் என்று பொருள்.




தவறுதலாக இந்த தாவரத்தின் எந்த பகுதியை சாப்பிட்டு விட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.




வீடுகளில் இதை வளர்ப்பவர்கள் குழந்தை மற்றும் வளர்ப்பு பிராணிகளை இதன் அருகே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.





மஞ்சள் அரளியையும் தங்க அரளியையும் குழப்பி கொள்ள வேண்டாம். இரண்டும் வெவ்வேறு வகையான தாவரங்கள்.



https://viewmyrainbowgarden.blogspot.com/2019/05/blog-post_20.html

Thursday, July 11, 2019

மணத்தக்காளி




ஆங்கில பெயர்கள்

Black night shade
Black berry
Garden night shade
Black tomato
European black night shade




மாற்று பெயர்கள்

மணி தக்காளி
மிளகு தக்காளி
கருந்தக்காளி
கரந்தை கீரை
சுக்கு கட்டி கீரை
காகமாசி
உலக மாதா
வாயசம்
விடைகந்தம்



மணி தக்காளியின் தாயகம் யுரேஷியா. கீரையாகவும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.





 ஜாம் தயாரிக்கவும், சாலட்களை அலங்கரிக்கவும் தென் ஆப்ரிக்காவில் இதன் பழங்களை பயன்படுத்துகின்றனர்.



மணத்தக்காளி செடி கிரேக்க நாகரிகத்தில் மந்திர வித்தைகளின் தெய்வமாக கருதப்படும் Hekate எனும் பெண் தெய்வத்துடன் தொடர்பு உடையதாக கருதப்படுகிறது.





மூன்று சாலைகள் சேரும் இடத்தில் உள்ள மணத்தக்காளி செடியின் குச்சிகளை காய வைத்து ஊதுபத்தி போல ஏற்றி மாந்த்ரீக சம்பிரதாயத்தில் பயன்படுத்துகின்றனர்.




மருத்துவ குணங்கள் இருந்தாலும் இதன் இலைகளையும் காய்களையும் பச்சையாக அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும்.‌



பல நாடுகளிலும் இதை களை செடியாகவும், விஷச் செடியாகவும் கருதுகின்றனர்.




இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் மணத்தக்காளி யின் இலைகளை வாய் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.





Wednesday, July 10, 2019

காராமணி


ஆங்கில பெயர்கள்

Cow pea
Black eyed peas

மாற்று பெயர்

தட்டைப் பயறு.


ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இது வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. இலைகள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.



இளம் காய்களை சமைத்து சாப்பிடலாம். முற்றிய காய்களை உலர்த்தி விதைகளையும் உணவில் பயன்படுத்தலாம். அதிக அளவு புரதச்சத்து கொண்டது.





சைவ உணவில் உள்ள புரதச்சத்து குறைபாட்டை சமன் செய்ய காராமணியை பயன்படுத்தலாம். குறைந்த GI கொண்ட காராமணி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.


நவராத்திரி மூன்றாம் நாளில் காராமணி காரச் சுண்டலும் சரஸ்வதி பூஜை அன்று காராமணி இனிப்பு சுண்டலும் செய்வது வழக்கம். காரடையான் நோன்பின் போது காராமணியை பயன்படுத்தி செய்யப்படும் அடை மிகவும் விசேஷம். 

Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...