ஆங்கில பெயர்கள்
Cow pea
Black eyed peas
மாற்று பெயர்
தட்டைப் பயறு.
ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இது வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. இலைகள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
இளம் காய்களை சமைத்து சாப்பிடலாம். முற்றிய காய்களை உலர்த்தி விதைகளையும் உணவில் பயன்படுத்தலாம். அதிக அளவு புரதச்சத்து கொண்டது.
சைவ உணவில் உள்ள புரதச்சத்து குறைபாட்டை சமன் செய்ய காராமணியை பயன்படுத்தலாம். குறைந்த GI கொண்ட காராமணி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.
நவராத்திரி மூன்றாம் நாளில் காராமணி காரச் சுண்டலும் சரஸ்வதி பூஜை அன்று காராமணி இனிப்பு சுண்டலும் செய்வது வழக்கம். காரடையான் நோன்பின் போது காராமணியை பயன்படுத்தி செய்யப்படும் அடை மிகவும் விசேஷம்.




