Friday, July 12, 2019

மஞ்சள் அரளி



ஆங்கில பெயர்கள்

Yellow oleander
Luck nut
Cook tree
Mexican oleander
Be still tree
Dicky plant.

மாற்று பெயர்கள்

விஷ அரளி
சாவு அரளி





மெக்சிகோவை தாயகமாகக் கொண்டது. இதில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற பூக்கள் பூக்கும் வகைகள் உள்ளன.





இந்த குறுமரத்தின் எல்லா பகுதிகளிலும் குறிப்பாக இதன் பால் மற்றும் விதைகளில் Cardiac glycosides என்ற விஷப் பொருள் உள்ளது. பூக்கள் மட்டுமே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.





அலங்கார செடியாக சாலை ஓரங்களில் வளர்க்கப்படும் இவை Sound pollution ஐ தடுக்க கூடிய தன்மை கொண்டவை.





இதன் அறிவியல் பெயர் Cascabel thevetia. இதில் Cascabel என்ற சொல்லுக்கு ஸ்பேனிஷ் மொழியில் கட்டுவிரியன் என்று பொருள்.




தவறுதலாக இந்த தாவரத்தின் எந்த பகுதியை சாப்பிட்டு விட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.




வீடுகளில் இதை வளர்ப்பவர்கள் குழந்தை மற்றும் வளர்ப்பு பிராணிகளை இதன் அருகே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.





மஞ்சள் அரளியையும் தங்க அரளியையும் குழப்பி கொள்ள வேண்டாம். இரண்டும் வெவ்வேறு வகையான தாவரங்கள்.



https://viewmyrainbowgarden.blogspot.com/2019/05/blog-post_20.html

Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...