ஆங்கில பெயர்கள்
Black night shade
Black berry
Garden night shade
Black tomato
European black night shade
மாற்று பெயர்கள்
மணி தக்காளி
மிளகு தக்காளி
கருந்தக்காளி
கரந்தை கீரை
சுக்கு கட்டி கீரை
காகமாசி
உலக மாதா
வாயசம்
விடைகந்தம்
மணி தக்காளியின் தாயகம் யுரேஷியா. கீரையாகவும் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஜாம் தயாரிக்கவும், சாலட்களை அலங்கரிக்கவும் தென் ஆப்ரிக்காவில் இதன் பழங்களை பயன்படுத்துகின்றனர்.
மணத்தக்காளி செடி கிரேக்க நாகரிகத்தில் மந்திர வித்தைகளின் தெய்வமாக கருதப்படும் Hekate எனும் பெண் தெய்வத்துடன் தொடர்பு உடையதாக கருதப்படுகிறது.
மூன்று சாலைகள் சேரும் இடத்தில் உள்ள மணத்தக்காளி செடியின் குச்சிகளை காய வைத்து ஊதுபத்தி போல ஏற்றி மாந்த்ரீக சம்பிரதாயத்தில் பயன்படுத்துகின்றனர்.
மருத்துவ குணங்கள் இருந்தாலும் இதன் இலைகளையும் காய்களையும் பச்சையாக அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும்.
பல நாடுகளிலும் இதை களை செடியாகவும், விஷச் செடியாகவும் கருதுகின்றனர்.









