Monday, May 27, 2019

கோகர்ண மல்லிகை



ஆங்கில பெயர்கள்


Yellow vein eranthemum

Golden pseuderanthemum

Golden net - bush

Golden eldorado



கோகர்ண மல்லிகையின் தாயகம் பாலினேசியா.

கோகர்ண மல்லிகையில் ஏறத்தாழ அறுபது வகைகள் உள்ளன.

கோகர்ண மல்லிகை செடிகளை தோட்டத்தில் நேரடியாகவோ  அல்லது தொட்டிகளிலோ வளர்க்கலாம்.


பூங்காக்களில் பார்டர் அமைக்க ஓரங்களில் வரிசையாக வளர்ப்பார்கள்.

அதிக அளவு பராமரிப்பு தேவையில்லாத செடி இது. தேவையான போது கிளை சீரமைப்பு செய்து வர நன்றாக வளரும்.

ஆரோக்கியமான தண்டு பகுதியை நட்டு இன விருத்தி செய்யலாம்.



பட்டாம்பூச்சிகளையும் தேனீக்களையும் கவரும் தன்மை கொண்டது.




ஊதா கோகர்ண மல்லிகை




ஆங்கில பெயர்கள்

Purple false eranthemum
Black varnish plant



இளம் சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. இலைகள் முற்றிய நிலையில் கருப்பாக மாறும்.











நீல கொடிவேலி


ஆங்கில பெயர்கள்  Blue plumbago, sky flowers, Cape leadwort, Cape plumbago, Nila chitrak.


தென் ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்டது. Plumbum என்ற லத்தீன் சொல்லுக்கு ஈயம் என்று பொருள். வெள்ளை, சாம்பல் நிறம், நீலம், என பல நிறங்களில் கொத்து கொத்தாக பூக்கும் இயல்பு கொண்டது.


இதன் வேர்கள் தலைவலி, எலும்பு முறிவு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஈயத்தால் ஏற்படும் விஷத்தன்மைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் இந்த செடியின் இலைச்சாறு தோலில் அரிப்பையும் சிலருக்கு கொப்புளங்களையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

இந்த செடிக்கு பூச்சி மற்றும் நோயை எதிர்க்கும் ஆற்றலும் வெப்பத்தை தாங்கும் சக்தியும்  இயற்கையிலேயே உண்டு என்பதால் அதிக கவனிப்பு தேவையில்லை. தேவைக்கேற்ப கிளைத் திருத்தம் செய்தாலே போதுமானது.




ஆசலை



ஆங்கில பெயர்கள்
Malabar nut, Adulsa, lion's muzzle, Stallion's tooth.

மாற்று பெயர்கள் வைத்திய மாதா, வாசை, ஆடாதொடை, சிம்ம முகி.



சித்த மருத்துவம், யுனானி, ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த மூலிகையை பயன்படுத்துகின்றனர்.
இந்த செடியின் இலை, பூ, பட்டை எல்லாமே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சளி, இருமல் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.


காய்களை பழுக்க வைக்க இதன் இலைகளை பயன்படுத்துகின்றனர். பூஞ்சை வளர்ச்சியை தடுக்கவும் பூச்சி விரட்டியாகவும் இதன் இலைகளை பயன்படுத்துகின்றனர். 




அன்ன முன்னா பழம்




ஆங்கில பெயர்கள்

Prickly custard, soursop, gravola tree.

மாற்று பெயர்கள்

அண்ண வண்ணா பழம்
காட்டு ஆத்தா
முள்ளு சீதா


இதன் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி அம்மை கண்ட பகுதியை சுத்தம் செய்வார்கள்.
தூக்கமின்மை, வயிற்றுப் பூச்சி, காய்ச்சல், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இதன் பழங்கள் மருந்தாக பயன்படுகிறது.
கீமோ தெரபியை விட பல மடங்கு அதிக அளவில் கேன்சர் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

பின் குறிப்பு

கட்டுரையில் தரப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றும் முன் மருத்துவரின் ஆலோசனையை கேட்கவும்.



Sunday, May 26, 2019

துலக்க சாமந்தி




ஆங்கில பெயர்கள்

Tagetes erecta,
Marigold

வகைகள்

African marigold
Mule marigold
French marigold
Signet marigold

மாற்று பெயர்

கட்டிக் கேந்தி




அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இது சூரிய காந்தி குடும்பத்தைச் சேர்ந்தது





சில நாடுகளில் இதன் பூவை டீ தயாரிக்கவும், உணவை அலங்கரிக்கவும், பூக்களின் விழுதைச் சமையலிலும் பயன்படுத்துகின்றனர்.




இறை வழிபாட்டிலும், விழா அலங்காரங்களிலும் , இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் இப்பூவை பயன்படுத்துகின்றனர்.





இப்பூக்களிலிருந்து இயற்கை சாயம் தாயாரிக்கப்படுகிறது.





தோல் நோய், வீக்கம், உடல் உஷ்ணம், அல்சர், பொடுகு, ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாக வீட்டு வைத்திய முறையில் இந்த பூவை பயன்படுத்துகின்றனர்.





இந்த பூவின் கடுமையான நெடி பூச்சி விரட்டியாக செயல்படுகிறது.

அழாகான இதன் பூக்களை பார்த்தாலே மனம் உற்சாகமடையும் என்பதில் ஐயமில்லை.

அரளி பூ



ஆங்கில பெயர்

Nerium oleander





மற்ற தாவரங்களை விட அதிக அளவு கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது.



அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஹிரோஷிமாவில் முதல் முதலாக பூத்த மலர் அரளி. எனவே அரளி பூவை ஹிரோஷிமாவின் அதிகார பூர்வ மலராக அறிவித்துள்ளனர்.




டெக்சாஸ் நகரைச் சேர்ந்த Galveston நகரத்தை Oleander City என்று அழைக்கின்றனர். 1921 ஆண்டு முதல் இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் oleander festival மிகவும் பிரபலமானது.  





1900 ஏற்பட்ட சூறாவளிக்கு பிறகு WHPA என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் Galveston நகர் முழுவதும் அரளி செடிகளை நட்டனர். 





இதன் எல்லா பகுதியும் விஷ தன்மை கொண்டது. என்றாலும் பாரம்பரிய மருத்துவத்தில் தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக உபயோகிக்கும் முறையில் இதிலிருந்து தயாரிக்கப்படும் கரவீர்ய தைலம் பரிந்துரைக்க படுகிறது.


அரளி வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. நான்கு வருடங்கள் வரை பலன் தரும். பிறகு பதியன் மூலமுமோ தண்டுகள் மூலமோ புதிய செடிகளை உருவாக்கி கொள்ளலாம். 




மூன்று முதல் ஐந்து மாதங்களில் பலன் தர துவங்கும். நுனிப்பகுதியை உடைத்து விட்டால் நிறைய கிளைகள் விடும். இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.




பூக்கள் விரைவில் வாடிவிடும். எனவே அதிகாலையில் மொட்டுகளாக பறித்து விற்பனைக்கு அனுப்பி விடுவார்கள்.










சீதா பழ மரம்



ஆங்கில பெயர்கள் 
Custard Apple, sugar apple, sweet sops,




சீதா பழம் என்ற பெயரைக் கொண்டு பலரும் இராமாயண சீதையையும் இந்த பழத்தையும் தொடர்பு படுத்தி குழம்ப்பி கொள்கிறார்கள். சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள். குளிர்ச்சி தன்மை கொண்ட பழம் என்பதால் இதற்கு சீதா பழம் என்று பெயரிட்டனர்.





இதன் இலை மற்றும் விதைகளில் உள்ள மிதமான விஷத்தன்மை பேன், உண்ணிகளை கொல்ல உதவுகிறது.  




இதன் இலைகளை கசக்கி கோழிக் கூண்டில் போட்டு வைத்தால் கோழிகளுக்கு உண்ணி தாக்குதல் இருக்காது.




இதய ஆரோக்கியம், எலும்பு உறுதி, ரத்த விருத்திக்கு இதன் பழங்கள் உதவுகின்றன.  இலைகளிலிருந்து தயாரிக்கப் படும் கஷாயம் நீரிழிவு நோயுக்கு மருந்தாக பயன்படுகிறது.




பழங்களை கொண்டு இனிப்புகளும், பானங்களும் தயாரிக்கப் படுகின்றன.












உன்னிச்செடி





ஆங்கில பெயர்கள் 
Lantana camara, West Indian lantana, tickberry, Big sage, wild sage.

மாற்று பெயர்கள் 
உன்னி முள்ளு, நுனிக்கிச்சாம் பூ.




அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இதை இப்போது உலகின் பல நாடுகளிலும் காணலாம்.






 அலங்கார செடியாகவும், வேலியாவும் இது வளர்க்கப்படுகிறது. மஞ்சள், வெள்ளை, பிங்க், ஊதா, சிவப்பு என பல வர்ண பூக்களை கொண்டது.




இதன் பழங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். சுவையான பெர்ரி போன்ற இந்த பழங்களை குரங்கு தின்னி பழம் என்பார்கள்.  





 இந்த செடியின் தண்டுகளிலிருந்து கூடைகளும் பொம்மைகளும் செய்யப்படுகிறது.




பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல், தோல் நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது.    





 இலைகளை  காயவைத்து புகைபோட்டு கொசுக்களை விரட்டலாம்.




தும்பை






common Leucas aspera, 
dronapushpi










.





Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...