ஆங்கில பெயர்கள் Blue plumbago, sky flowers, Cape leadwort, Cape plumbago, Nila chitrak.
தென் ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்டது. Plumbum என்ற லத்தீன் சொல்லுக்கு ஈயம் என்று பொருள். வெள்ளை, சாம்பல் நிறம், நீலம், என பல நிறங்களில் கொத்து கொத்தாக பூக்கும் இயல்பு கொண்டது.
இந்த செடிக்கு பூச்சி மற்றும் நோயை எதிர்க்கும் ஆற்றலும் வெப்பத்தை தாங்கும் சக்தியும் இயற்கையிலேயே உண்டு என்பதால் அதிக கவனிப்பு தேவையில்லை. தேவைக்கேற்ப கிளைத் திருத்தம் செய்தாலே போதுமானது.



