ஆங்கில பெயர்கள்
Lantana camara, West Indian lantana, tickberry, Big sage, wild sage.
மாற்று பெயர்கள்
உன்னி முள்ளு, நுனிக்கிச்சாம் பூ.
அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இதை இப்போது உலகின் பல நாடுகளிலும் காணலாம்.
அலங்கார செடியாகவும், வேலியாவும் இது வளர்க்கப்படுகிறது. மஞ்சள், வெள்ளை, பிங்க், ஊதா, சிவப்பு என பல வர்ண பூக்களை கொண்டது.
இதன் பழங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். சுவையான பெர்ரி போன்ற இந்த பழங்களை குரங்கு தின்னி பழம் என்பார்கள்.
இந்த செடியின் தண்டுகளிலிருந்து கூடைகளும் பொம்மைகளும் செய்யப்படுகிறது.
பாக்டீரியாவால் ஏற்படும் காய்ச்சல், தோல் நோய்களுக்கு இது மருந்தாக பயன்படுகிறது.
இலைகளை காயவைத்து புகைபோட்டு கொசுக்களை விரட்டலாம்.







