ஆங்கில பெயர்கள்
Custard Apple, sugar apple, sweet sops,
சீதா பழம் என்ற பெயரைக் கொண்டு பலரும் இராமாயண சீதையையும் இந்த பழத்தையும் தொடர்பு படுத்தி குழம்ப்பி கொள்கிறார்கள். சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள். குளிர்ச்சி தன்மை கொண்ட பழம் என்பதால் இதற்கு சீதா பழம் என்று பெயரிட்டனர்.
இதன் இலை மற்றும் விதைகளில் உள்ள மிதமான விஷத்தன்மை பேன், உண்ணிகளை கொல்ல உதவுகிறது.
இதன் இலைகளை கசக்கி கோழிக் கூண்டில் போட்டு வைத்தால் கோழிகளுக்கு உண்ணி தாக்குதல் இருக்காது.
இதய ஆரோக்கியம், எலும்பு உறுதி, ரத்த விருத்திக்கு இதன் பழங்கள் உதவுகின்றன. இலைகளிலிருந்து தயாரிக்கப் படும் கஷாயம் நீரிழிவு நோயுக்கு மருந்தாக பயன்படுகிறது.
பழங்களை கொண்டு இனிப்புகளும், பானங்களும் தயாரிக்கப் படுகின்றன.






