ஆங்கில பெயர்
Nerium oleander
மற்ற தாவரங்களை விட அதிக அளவு கார்பன்டை ஆக்சைடை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது.
அணுகுண்டு தாக்குதலுக்கு பிறகு ஹிரோஷிமாவில் முதல் முதலாக பூத்த மலர் அரளி. எனவே அரளி பூவை ஹிரோஷிமாவின் அதிகார பூர்வ மலராக அறிவித்துள்ளனர்.
டெக்சாஸ் நகரைச் சேர்ந்த Galveston நகரத்தை Oleander City என்று அழைக்கின்றனர். 1921 ஆண்டு முதல் இங்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் oleander festival மிகவும் பிரபலமானது.
1900 ஏற்பட்ட சூறாவளிக்கு பிறகு WHPA என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் Galveston நகர் முழுவதும் அரளி செடிகளை நட்டனர்.
இதன் எல்லா பகுதியும் விஷ தன்மை கொண்டது. என்றாலும் பாரம்பரிய மருத்துவத்தில் தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக உபயோகிக்கும் முறையில் இதிலிருந்து தயாரிக்கப்படும் கரவீர்ய தைலம் பரிந்துரைக்க படுகிறது.
அரளி வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. நான்கு வருடங்கள் வரை பலன் தரும். பிறகு பதியன் மூலமுமோ தண்டுகள் மூலமோ புதிய செடிகளை உருவாக்கி கொள்ளலாம்.
மூன்று முதல் ஐந்து மாதங்களில் பலன் தர துவங்கும். நுனிப்பகுதியை உடைத்து விட்டால் நிறைய கிளைகள் விடும். இதனால் அதிக மகசூல் கிடைக்கும்.
பூக்கள் விரைவில் வாடிவிடும். எனவே அதிகாலையில் மொட்டுகளாக பறித்து விற்பனைக்கு அனுப்பி விடுவார்கள்.
இ









