Saturday, August 17, 2019

பாதாம் மரம்





ஆங்கில பெயர்

Almond tree

மாற்று பெயர்கள்

வாதுமை மரம்
வலாங் கொட்டை மரம்

பாதாம் கொட்டை (nut) வகையைச் சேர்ந்தது அல்ல. உள் ஓட்டு சதை கனி (drupe) வகையைச் சேர்ந்தது. வெளிப்புற சதை பகுதி, மேல் ஓடு, அதற்குள் கொட்டை இருக்குமேயானால் அதை உள்ளோட்டு சதைக்கனி என்பர்.





இரானை தாயகமாகக் கொண்டது.
இனிப்பு பாதாம், கசப்பு பாதாம் என இரு வகைகள் உள்ளன. கசப்பு வகை பாதாமில் உள்ள hydrocyanic acid உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.

பாதாம் பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அழகுசாதனப் பொருளாகவும், உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. பாதாம் பருப்பு பச்சையாகவும் வறுத்தும் சாப்பிடப்படுகிறது. இது மட்டுமின்றி பாதாம் பருப்பை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.

இலைகள் நீரின் pH அளவை மாற்றும் தன்மை கொண்டவை. எனவே மீன் தொட்டிகளில் பாதாம் இலையை போட்டு வைத்தால் மீன்கள் தங்கள் இயற்கை சூழலில் இருப்பது போன்று உணர்கின்றன. இதனால் மீன்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

வீடுகளில் இருக்கும் சிறிய மீன் தொட்டிகளில் ஒரு சிறிய பாதாம் இலையை போட்டு வைக்கலாம். இலைகள் tannins என்ற பொருளை வெளியிடுவதால் நீரின் நிறம் மாறும். மாதத்திற்கு ஒரு முறை இலைகளை மாற்றினால் போதுமானது.






Thursday, August 15, 2019

துவரை





ஆங்கில பெயர்கள்
Pigeon pea

No - eye pea

மாற்று பெயர்கள்

ஆடகம்
தோரை




































Sunday, August 11, 2019

புங்கை மரம்




ஆங்கில பெயர்கள்

Pongame oil tree
Derris indica
Indian beech

மாற்று பெயர்கள்

புங்க மரம்
கிரஞ்ச மரம்
கரஞ்சகம்




சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புங்க மரம்


பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடும் மரங்களில் புங்க மரமும் ஒன்று.

சுற்றுச்சூழலில் உள்ள வெப்பத்தை ஈர்த்தது கொள்ளும் தன்மை புங்க மரத்திற்கு உண்டு. எனவே புங்க மரங்கள் உள்ள இடங்களில் வெப்பநிலை குறைந்து விடும்.

பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் உள்ள வேர் முடுச்சுகள் காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி  மண்ணை வளப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. புங்க மரமும் பட்டாணி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் என்பதால் புங்க மரத்திற்கு இந்த ஆற்றல் உண்டு.




புங்க மரத்தின் பயன்கள்

பூ, இலை, காய், பட்டை, வேர், என புங்க மரத்தின் அனைத்தும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மூட்டு வலி உள்ள இடத்தில் புங்க இலை சேர்த்து காய்சிய நீரை பொறுக்கும் சூட்டில் ஊற்றிக் கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புங்கங் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பூச்சி விரட்டியாகவும் சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்த எண்ணையிலிருந்து இயற்கை டீசல் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன.




புதுச்சேரி முத்தியால்பேட்டை ஶீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் நாகப்பட்டினம் திருப்புன்கூர் சிவ லோக நாதர் கோயில் ஸ்தல விருட்சமாக இருப்பது புங்க மரம் என்பது குறிப்பிடத்தக்கது.


பொன்னாங்கண்ணி கீரை



ஆங்கில பெயர்கள்

Sessile joy weed
Alternanthera sessilis
Dwarf copper leaf

மாற்று பெயர்கள்

கொடுப்பை
சீதை


பெயர் காரணம்

பொன்னாங்கண்ணி கீரை குளிர்ச்சியை கொடுக்கும்.  எனவேதான் சீதள தன்மை கொண்டது என்ற பொருளில் இதை சீதை என்று அழைக்கின்றனர்.

 கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதே சமயம் தங்க சத்து அதிகம் உள்ள கீரை. எனவே தான் இதை பொன்னாங்கண்ணி என்று அழைக்கின்றனர்.

இதன் இலைகள் கொடுப்பை மீனை போல் உள்ளதால் இதை கொடுப்பை என்று அழைக்கின்றனர்.

வாய் புண் உள்ளவர்கள் இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள புண் குணமாகும். உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இந்த கீரையை எண்ணெயில் போட்டு தைலமாக காய்ச்சி தலைக்கு தடவிக்கொள்ளலாம்.


சீமை பொன்னாங்கண்ணி




சிகப்பு இலைகளை கொண்டிருப்பதால் இதை சிகப்பு பொன்னாங்கண்ணி என்றும் கூறுவர்.

சீமை பொன்னாங்கண்ணி கீரைபெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப் படுகிறது.


Saturday, August 10, 2019

பசலைக்கீரை




ஆங்கில பெயர்கள்

Malabar spinach
Ceylon spinach

மாற்று பெயர்

கொடிப்பசலை






வாய் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாக பயன்படுகிறது.

தண்டுகள் மற்றும் விதைகள் மூலம் புது செடிகள் வளர்க்க படுகிறது.







குளிர் பிரதேசங்களில் பசலைக்கீரை செழித்து வளர்வதில்லை.


கொடிகளின் நுனி பகுதியில் ஐந்து முதல் ஆறு இன்ச் நீளம் கத்தரித்து அறுவடை செய்யலாம்.


பூ விடும் முன்பு அறுவடை செய்ய வேண்டும். பூ விட்ட பின் இலைகளின் சுவை மாறிவிடும்.


கூட்டு, சூப், பஜ்ஜி செய்ய ஏற்றது.

Monday, August 5, 2019

வாடாமல்லி




ஆங்கில பெயர்கள்

Globe Amarnath
Bachelor button
Gomphrena




ஊதா, வெள்ளை, சிவப்பு என பல நிறங்களில் பூக்கும் இயல்பு கொண்டது. என்றாலும் ஊதா நிற பூக்களே அதிக அளவில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது.




நீண்ட நாட்களுக்கு வாடாது என்பதால் மலர் அலங்காரம் மற்றும் மாலை கட்ட வாடாமல்லி பூக்களை பயன்படுத்துகின்றனர்.




ஊதா நிறம் என கூறினாலும் வாடாமல்லி கலர் என ஒரு நிறத்திற்கே பெயரிடும் அளவுக்கு பிரத்யேக நிறத்தைக் கொண்டது.




இருமல், சேற்றுப் புண், காய்ச்சல், கொப்புளங்கள் என பல பிரச்சனைகளுக்கு மருந்தாக வீட்டு வைத்திய முறையில் பயன்படுத்த படுகிறது.





தோல் சுருக்கங்களை நீக்க வாடாமல்லி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தையல் உதவுகிறது.




சனி பகவானிற்கு உகந்த மலராக வாடாமல்லி கருதப்படுகிறது.


Friday, August 2, 2019

வெற்றிலை கொடி




மாற்று பெயர்கள்

மெல்லிலை
பசும் தங்கம்
நாகவல்லி


பூ, காய், ஏதும் இல்லாத தாவரம் இது. எனவே தான் இலைகளை தவிர வேறு ஏதும் இல்லாதது என்ற பொருளில் இதற்கு வெற்று இலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.

மலேஷியா, சீனா, இந்தோனேசியா, இலங்கை போன்ற பல நாடுகளிலும் வெற்றிலை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வெற்றிலையில் உள்ள chavicol நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். செல் சிதைவை தடுக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு.
இருமல், வாய் துர்நாற்றம், கபம் போன்ற பிரச்சனைகளுக்கு வெற்றிலை பயன் படுகிறது.

தாம்பூலம் தரித்தல்

வெற்றிலையின் காம்பு நடு நரம்பை நீக்கி சிறிது சுண்ணாம்பு, பாக்கு, வைத்து சாப்பிடும் முறைக்கு தாம்பூலம் தரித்தல் என்று பெயர். 


பாக்கு பித்தத்தையும் சுண்ணாம்பு வாதத்தையும், வெற்றிலை கபத்தையும் கட்டுப்படுத்தும்.







சிலர் இத்துடன் கிராம்பு, ஜாதி பத்திரி, ஏலக்காய், கல்கண்டு சேர்த்து சாப்பிடுவார்கள்.

வாயுவை கட்டுப்படுத்தும், ஜீரணத்தை அதிகரிக்கும் என்பதால் உணவுக்கு பின் தாம்பூலம் தரிக்கும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு பாக்கு வெட்டி அனைத்தும் அடங்கிய பெட்டியை வெற்றிலை செல்லம் என்பார்கள்.



வெற்றிலை நிழலில் நன்றாக வளரும். எனவே தென்னை, பாக்கு, அகத்தி மரங்களுக்கு அருகில் வெற்றிலையை நட்டு அதன் மீது படர விடுவார்கள்.

சில விவசாயிகள் பந்தல் அமைத்து அதில் படர விடுவார்கள். இந்த பந்தல்களை வெற்றிலை கொடிக்கால் என்பார்கள்.

கரும் பச்சை நிற வெற்றிலை ஆண் என்றும் இளம் பச்சை நிற வெற்றிலை பெண் எனவும் கூறுவர்.

வெற்றிலையை பதியன் மூலமும் தண்டுகள் மூலமும் இன விருத்தி செய்யலாம்.

Thursday, August 1, 2019

முதம்பா மலர்



ஆங்கில பெயர்கள்

Beach naupaka
Fan flower
Malayan rice paper
Bhadraksha
Scaevola taccada
Vella muttagam



பாதி பூவின் கதை


ஹவாய் தீவில் கடற்கரை மற்றும் மலை பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதற்கு பின்னணியில் கர்ண பரம்பரையாக ஒரு சுவையான கதை கூறப்படுகிறது.

ஹவாய் தீவில் இருந்த Naupaka என்ற இளவரசியும் Kaui என்ற சாதாரண குடிமகனும் காதலிக்கின்றனர். எதிர்புகளை சமாளிக்க முடியாமல் மலை மீது இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்று இறைவனை வேண்டுகிறார்கள். இறைவனும் செவிசாய்காமல் போகவே இளவரசி தான் சூடியிருந்த மலரை எடுத்து பாதியாக கிழித்து ஒரு பாதியை காதலனிடம் தந்து ' நீ கடற்கரைக்கு போ. நான் இந்த மலைமீது இருந்து விடுகின்றேன் ' என்கிறாள்.

அன்று முதல் இன்று வரை அந்த செடியில் பாதி பூக்கள் மட்டுமே பூக்கிறதாம்.


ஆயுர்வேதத்தில் தலைவலி, அஜீரணம், வீக்கம் போன்றவற்றை குணப்படுத்த இதை பயன்படுத்துகின்றனர்.

கிளைகள் மண் மீது படர்ந்தாலே பதியன் இட்டது போல புது செடியாக வளர்ந்து விடும்.

பின் குறிப்பு

இந்த செடியின் சரியான தமிழ் பெயர் தெரியவில்லை. முதம்பா என்பது கேள்விப்பட்ட பெயர் மட்டுமே. தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்.

Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...