மாற்று பெயர்கள்
மெல்லிலை
பசும் தங்கம்
நாகவல்லி
பூ, காய், ஏதும் இல்லாத தாவரம் இது. எனவே தான் இலைகளை தவிர வேறு ஏதும் இல்லாதது என்ற பொருளில் இதற்கு வெற்று இலை என்று பெயர் சூட்டியுள்ளனர்.
மலேஷியா, சீனா, இந்தோனேசியா, இலங்கை போன்ற பல நாடுகளிலும் வெற்றிலை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
வெற்றிலையில் உள்ள chavicol நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். செல் சிதைவை தடுக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு.
இருமல், வாய் துர்நாற்றம், கபம் போன்ற பிரச்சனைகளுக்கு வெற்றிலை பயன் படுகிறது.
தாம்பூலம் தரித்தல்
வெற்றிலையின் காம்பு நடு நரம்பை நீக்கி சிறிது சுண்ணாம்பு, பாக்கு, வைத்து சாப்பிடும் முறைக்கு தாம்பூலம் தரித்தல் என்று பெயர்.
பாக்கு பித்தத்தையும் சுண்ணாம்பு வாதத்தையும், வெற்றிலை கபத்தையும் கட்டுப்படுத்தும்.
சிலர் இத்துடன் கிராம்பு, ஜாதி பத்திரி, ஏலக்காய், கல்கண்டு சேர்த்து சாப்பிடுவார்கள்.
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு பாக்கு வெட்டி அனைத்தும் அடங்கிய பெட்டியை வெற்றிலை செல்லம் என்பார்கள்.
வெற்றிலை நிழலில் நன்றாக வளரும். எனவே தென்னை, பாக்கு, அகத்தி மரங்களுக்கு அருகில் வெற்றிலையை நட்டு அதன் மீது படர விடுவார்கள்.
சில விவசாயிகள் பந்தல் அமைத்து அதில் படர விடுவார்கள். இந்த பந்தல்களை வெற்றிலை கொடிக்கால் என்பார்கள்.
கரும் பச்சை நிற வெற்றிலை ஆண் என்றும் இளம் பச்சை நிற வெற்றிலை பெண் எனவும் கூறுவர்.
வெற்றிலையை பதியன் மூலமும் தண்டுகள் மூலமும் இன விருத்தி செய்யலாம்.


