ஆங்கில பெயர்
Aloe Vera
மாற்று பெயர்கள்
கன்னி
தாழை
ஆலோ இன தாவரத்தில் பல வகைகள் உண்டு. இதில் மருத்துவம் மற்றும் அழகு சாதன பொருளாக பயன் படுவது ஆலோ விரா வகையாகும். ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்டது.
வறண்ட பகுதிகளில் வளர்வதாலும் முட்கள் காணப்படுவதாலும் இதை பலர் கள்ளி செடி என நினைக்கிறார்கள். ஆனால் இது லில்லி குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.
பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமின்றி அழகு சாதன பொருளாக பயன்படுவதால் இதன் தேவை அதிகரித்து வருகிறது. தரிசு நிலத்தில் குறைவான நீர் மற்றும் உரம் கொண்டு பயிரிட முடியும் என்பதால் பல விவசாயிகள் வணிக பயிராக சாகுபடி செய்கின்றனர்.
இதன் விதைகளையும் இலைகளையும் உணவாகவும் பயன்படுத்தலாம். இலைகளுக்குள் இருக்கும் ஜெல் போன்ற கூழில் தொன்னூறு சதவீதம் நீர் சத்து இருப்பதால் அறுவடை செய்த உடனேயே பக்குவ படுத்தி விடுகிறார்கள்.
வீட்டின் நுழை வாயிலில் இதை கட்டி வைத்தால் எதிர் மறை சக்திகளால் தொந்தரவு ஏற்படாது என்ற நம்பிக்கை நிலவுகிறது.





