ஆங்கில பெயர்கள்
Bitter melon
Bitter gourd
Squash balsam pear
Bitter apple
பாகற்காய் செடியில் ஆண் பூ பெண் பூ என இரு வகை பூக்கள் பூக்கும். சிறிய பிஞ்சுகளுடன் கூடிய பூக்கள் பெண் பூக்கள். இவையே காய்களாக மாறும். முதல் சில வாரங்களுக்கு ஆண் பூக்கள் மட்டுமே பூக்கும். பொறுமையுடன் காத்திருந்தால் நிறைய பெண் பூக்கள் பூக்கும்.
பாகற்காயின் தாயகம் இந்தியா. இந்தியாவில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என்ற இரு வகைகள் அதிகம் விளைவிக்கப் படுகின்றன. காயாக அதிகம் பயன்படுத்த பட்டாலும் இது பழ வகையைச் சேர்ந்தது.
நீரிழிவு, வயிற்றுப் பூச்சி பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பாகற்காய் பயன்படுகிறது. அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப் போக்கு, கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.




