Sunday, May 26, 2019

சாமந்தி



ஆங்கில பெயர்கள்

Chrysanthemum
Chamomile
Chrysanths
Mums





Chrysanthemum என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் தங்க மலர் என்று பொருள்.


தமிழில் இந்த பூவை செவ்வந்தி பூ என்றும் அழைப்பர்.






ஜப்பான் நாட்டு அரச குடும்பத்தின் அடையாளமாக சாமந்தி பூ உள்ளது.

சாமந்தி பூவின் இதழ்களை நீரிலிட்டு கொதிக்க வைத்து தேநீர் போல் பருகும் வழக்கம் கொரியா நாட்டில் உண்டு.




சாமந்தி சூர்யகாந்தி பூ குடும்பத்தைச் சேர்ந்தது. வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்களே அதிக அளவில் விளைவிக்க படுகிறது என்றாலும் ஒட்டு ரகங்கள் மூலம் வேறு நிறங்களிலும் சாமந்திப் பூக்கள் கிடைக்கிறது.








மலர் அலங்காரம் மற்றும் தெய்வ வழிபாட்டில் சாமந்தி பூக்கள் அதிகம் பயன்படுத்த படுவதால் சாமந்தி பூக்களை விவசாயிகள் விரும்பி பயிரிடுகின்றனர்.








சாமந்தி செடிகளை நட்டு மொட்டுகள் தோன்றும் முன்பு நுனிகளை உடைத்து விடுவார்கள். இதனால் பக்கவாட்டில் பல கிளைகள் வளர்ந்து அதிக அளவில் பூக்கள் பூக்கும்.






மறுதாம்பு முறையில் சாமந்தி பூ செடிகள் இனவிருத்தி செய்யப்படுகிறது.








சாமந்தி பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
வீக்கம், சோர்வு, தலைவலி, மலச்சிக்கல் தீர உலர்ந்த சாமந்தி பூவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர்.





சீன மருத்துவத்தில் சாமந்தி முக்கிய இடம் வகிக்கிறது. நவம்பர் மாதம் ஒன்பதாம் நாள் சாமந்தி பூ திருவிழா கொண்டாடப்படுகிறது.







2017 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் அதிவேகமாக வளரக் கூடிய சாமந்தி பூ இனம் உருவாக்கப்பட்டது. அதற்கு இந்திய பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.







Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...