Wednesday, June 26, 2019

மஞ்சள் கோண் பூ




ஆங்கில பெயர்கள் Allamanda, golden trumpet, yellow bells, trumpt vine, yellow allamanda.

கொடி, புதர் என இரு வகைகள் உள்ளன. புதர் வகை செடிகளை bush allamanda என்று அழைக்கின்றனர்.

மஞ்சள் பூக்கள் மட்டுமின்றி அரிதாக இளம் சிவப்பு நிற பூ வகை செடிகளும் இதில் உண்டு.



அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த செடிகளை அலங்கார செடியாக உலகின் பல நாடுகளிலும் வளர்க்கின்றனர்.




பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். செடியின் பாகங்களை உடைக்கும் போது வரும் பால் சிலருக்கு அரிப்பை ஏற்படுத்தும். இதை உண்ணும் கால்நடைகள் அஜீரண கோளாறுகளுக்கு உள்ளாகின்றன.


பதியன் மூலமும் விதைகள் மூலமும் இன விருத்தி செய்யலாம். அதிக கவனிப்பு தேவையில்லாத  இந்த செடிகளை தேவையானபோது கிளை சீரமைப்பு செய்தாலே போதும்.

Monday, June 24, 2019

தென்னை



தெங்கு, தாழை, தெக்கம் பழம் என்பது இதன் வேறு பெயர்கள்.

செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதன் பூக்கள், காய்கள், இளநீர், மட்டை, கொப்பரை காயின் மேலோடு, நார், எண்ணெய் என எல்லா பகுதியும் பயன்படுத்தப்படுகிறது.


பனை குடும்பத்தைச் சேர்ந்த தேங்காயை ஆங்கிலத்தில் Coconut என அழைத்தாலும் இது ஒரு உள்ளோட்டு சதைக்கனியாகும்.

Coco என்ற சொல்லுக்கு தலை, மண்டை ஓடு என்று பொருள். உருவ ஒற்றுமை காரணமாக ஆங்கிலத்தில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.



தேங்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல், முடி பிரச்சனைகளுக்கு மருந்தாககவும் அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.



உடல் உஷ்ணம், நீர் சத்து குறைவு, வயிற்றுப் போக்கு, பிளாஸ்மா குறைவு, வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு இளநீர் குடிப்பது நல்லது.


மூலம், வயிற்றுக் கோளாறு, சளி, நரம்பு தளர்ச்சி, போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாக தென்னம் பூ பயன்படுத்தப்படுகிறது.


முற்றிய தேங்காயின் உட்பகுதியிலிருந்து வரும் முளையை தேங்காய் பூ என்பார்கள். இது நோய் எதிர்ப்புச் சக்தியை தரும், ஜீரணத்தை அதிகரிக்கும், சோர்வை போக்கும், இன்சுலின் சுரப்பை தூண்டும்.

இறை வழிபாட்டின் போது உடைக்கப் படும் தேங்காயில் பூ இருப்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.


மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் சிராவண பௌர்ணமியன்று நாரியல் பூர்ணிமா என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர். நாரியல் என்றால் தேங்காய். கடலுக்கு நன்றி செலுத்த தேங்காய்களை கடலுக்கு சமர்ப்பிக்கும் விழா இது.


Sunday, June 23, 2019

சீமை அல்லி



ஆங்கில பெயர்கள்
Dahlia, cane flowers, water pipe flowers.






இதன் கிழங்குகள் மெக்சிகோ, மத்திய அமெரிக்க நாடுகளில் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.


மெக்சிகோவை தாயகமாகக் கொண்ட இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.





வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இயல்பு கொண்டது.





 பூக்கும் காலம் முடிந்த பிறகு கிழங்குகளை சேகரித்து இன விருத்தி செய்யப்படுகிறது.


இதன் கிழங்குகளிலிருந்து எடுக்கப்படும் Inulin நீரிழிவு நோயுக்கு மருந்தாக பயன்படுகிறது.


நந்தியாவட்டை


நந்தியாவட்டையின்ஆங்கில பெயர்கள்

        Crepe Jasmine, moon beam, East Indian rosebay, pinwheel flower, Nero's crown, carnation of India.



அடுக்கு நந்தியாவட்டை யின் ஆங்கில பெயர்கள்

Double flowering crepe Jasmine, double layer crepe Jasmine.           




கண்களின் விழி வட்டத்திற்கு நந்தி வட்டம் என்றொரு பெயரும் உண்டு. கண்களில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு இந்த மூலிகை பயன் படுவதால் இதற்கு நந்தியாவட்டை என பெயர் சூட்டினார்கள் போலும்.





இந்த செடியின் இலை பூ வேர் மற்றும் பால் பாரம்பரிய மருத்துவத்தில் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் தெய்வ வழிபாட்டுகளில் முக்கிய இடம் வகிக்கிறது



உடல் உஷ்ணம், வீக்கம், கண் எரிச்சல், தோல் நோய், வயிற்றுக் கடுப்பு, பல் பிரச்சினைகள் என பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.







மா மரம்




Mango என்ற பெயர் மாங்காய் என்ற தமிழ் சொல்லிலிருந்து உருவானது.



இந்தியா, பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது. பங்களாதேஷின் தேசிய மரம் மா மரம்.




இம்மரத்தின் இலைகள், பூக்கள், துளிர், காம்பிலிருந்து வடியும் பால், மரப்பட்டை, பிஞ்சு, என அனைத்து பகுதிகளுமே பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.




திருமயிலாடுதுறை, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், பாதாளேச்சுரம், திருமாந்துறை, போன்ற பல கோவில்களில் ஸ்தல விருட்சமாக மா மரம் உள்ளது.


இதன் காய்களும், பழங்களும் பலவித உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.



இட்லி பூ




ஆங்கில பெயர்கள்

West Indian Jasmine, Jungle flame,

வேறு பெயர்கள்

வெட்சி, குல்லை, செங்கொடுவேரி, சேதாரம்.


தோல் நோய், சளி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் பொடுகு தொல்லைகளை நீக்க இதன் இலைகளும் பூக்களும் பயன்படுத்தபடுகிறது.




அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப் பாட்டு, போன்ற பல தமிழ் இலக்கியங்களில் வெட்சியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.




 சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை என பல நிறங்களில் கொத்து கொத்தாக பூக்கும் இயல்பு கொண்டது.




இதன் பூக்கள் ஓரிரு நாட்கள் வரை வாடாது என்பதால் இந்த பூவை மாலை செய்யவும் விழா அலங்காரங்களிலும் பயன்படுத்துகின்றனர்.




இது இந்து மத வழிபாட்டிலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுவதால் வியாபார ரீதியாகவும் பெருமளவு பயிரிடப்படுகிறது.

Wednesday, June 5, 2019

பாலைவன ரோஜா


ஆங்கில பெயர்கள்

Desert Rose, Sabi Star, Impala Lily, Mock asalea.


ஆப்பிரிக்க பாலைவனங்களில் அதிகம் காணப்படும் இந்த செடிகள் தற்போது அழகுக்காக உலகின் பல நாடுகளிலும் வளர்க்கப்படுகின்றது.




மயக்கத்தை ஏற்படுத்தும் இந்த செடிகளின் பாலை மிருகங்களை வேட்டையாடவும் வளர்ப்பு பிராணிகளின் உண்ணிகளை நீக்கவும் பயன்படுத்துகின்றனர்.




நீண்ட ஆயுள் கொண்ட இந்த செடிகளை பதியன் இடுவதன் மூலம் இன விருத்தி செய்யலாம்.




இந்த செடிகளை மணல் கலந்த மண்ணில் நட்டு சிறிதளவு நீர் விட்டாலே செழித்து வளரும்.




மாதுளை




ஆங்கில பெயர்கள்

Pomegranate
Punica granatum
apple grenade

மாற்று பெயர்கள்

மாதுளம்
மாதுளங்கம்
பீசபுரம்
தாடிமம்
கழுமுள்



இரானை தாயகமாகக் கொண்டது.

பெர்ரி வகையைச் சேர்ந்த குறுமரம்



இதன் ஆங்கில பெயர் விதைகள் உள்ள ஆப்பிள் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது.


மாதுளையின் தண்டுகளை நட்டு வைப்பதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.





சில மாதங்களுக்கு பிறகு துளிர்களை மட்டும் விட்டு விட்டு இலைகளை நீங்கி விடுவார்கள். அதேபோல் முதலில் தோன்றும் பூகக்களையும் கிள்ளி விடுவார்கள். இவ்வாறு கவாத்து செய்வதன் மூலம் மகசூல் பெருகும்.


மாதுளை வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. என்றாலும் பூக்கும் காலத்தில் ஈரப்பதம் தேவை.





பிஞ்சுகளில் உள்ள பூ முனை பகுதியில் பூச்சிகள் முட்டை இடும். கற்பூர கரைசலை தெளிப்பதன் மூலமும் துணி சுற்றி வைப்பதன் மூலமும் இதை தவிர்க்கலாம்.


பூ, பட்டை, விதை, பழம் என எல்லா பகுதியும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.



மாதுளம் பழச் சாறு இரத்தத்தின் பிராண வாயு கிரகிப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
இரும்பு சத்து, விட்டமின் ஏ,கே, சி, ஈ, துத்தநாகம்,செம்பு சத்துக்கள் நிறைந்த பழம்.


இதில் உள்ள ப்யூனிக் அமிலம் பாக்டீரியாக்களை எதிர்க்கும் ஆற்றலை தருகிறது.


எருக்கு
















Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...