செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதன் பூக்கள், காய்கள், இளநீர், மட்டை, கொப்பரை காயின் மேலோடு, நார், எண்ணெய் என எல்லா பகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
பனை குடும்பத்தைச் சேர்ந்த தேங்காயை ஆங்கிலத்தில் Coconut என அழைத்தாலும் இது ஒரு உள்ளோட்டு சதைக்கனியாகும்.
Coco என்ற சொல்லுக்கு தலை, மண்டை ஓடு என்று பொருள். உருவ ஒற்றுமை காரணமாக ஆங்கிலத்தில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தேங்காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல், முடி பிரச்சனைகளுக்கு மருந்தாககவும் அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.
உடல் உஷ்ணம், நீர் சத்து குறைவு, வயிற்றுப் போக்கு, பிளாஸ்மா குறைவு, வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு இளநீர் குடிப்பது நல்லது.
மூலம், வயிற்றுக் கோளாறு, சளி, நரம்பு தளர்ச்சி, போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாக தென்னம் பூ பயன்படுத்தப்படுகிறது.
முற்றிய தேங்காயின் உட்பகுதியிலிருந்து வரும் முளையை தேங்காய் பூ என்பார்கள். இது நோய் எதிர்ப்புச் சக்தியை தரும், ஜீரணத்தை அதிகரிக்கும், சோர்வை போக்கும், இன்சுலின் சுரப்பை தூண்டும்.
இறை வழிபாட்டின் போது உடைக்கப் படும் தேங்காயில் பூ இருப்பது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.
மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் சிராவண பௌர்ணமியன்று நாரியல் பூர்ணிமா என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர். நாரியல் என்றால் தேங்காய். கடலுக்கு நன்றி செலுத்த தேங்காய்களை கடலுக்கு சமர்ப்பிக்கும் விழா இது.






