ஆங்கில பெயர்கள்
Holy basil, sacred basil,
மாற்று பெயர்கள்
திருத்துழாய்
துவளம்
ஹரிப்பிரியா
பிருந்தா
விஷ்ணு வல்லபி.
மற்றெந்த தாவரங்களையும் விட அதிக அளவு பிராணவாயுவை வெளி விடும் தன்மை கொண்டது. இதனாலேயே நம் முன்னோர்கள் இந்த செடியை வீடுகளில் வைத்து வளர்த்தனர்.
பாரம்பரிய மருத்துவத்திலும், இந்து சமய வழிபாட்டிலும் அதிக அளவு பயன்படுத்த படுவதால் விவசாயிகளும் துளசியை பயிரிடுகின்றனர்.
துளசி இலை கிருமி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.
துளசியை நேரிடையாக மென்று சாப்பிடுவது ஈருகளில் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே துளசி இலையை நீரில் ஊற வைத்தோ அல்லது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
கார்த்திகை மாதம் சுக்ல பட்ச துவாதசி அன்று கொண்டாடப்படும் துளசி விவாஹம் மிகவும் பிரபலமான பண்டிகையாகும்.





