Friday, May 24, 2019

குண்டு மல்லி




ஆங்கில பெயர்கள்

Arabian Jasmine
Jasminum sambac
Sambac Jasmine
Belle of India
Maid of Orleans
Grand Duke of Tuscany



குண்டு மல்லி பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதை Sampa  guita என்று அழைக்கின்றனர். இதற்கு ( I promise ) நான் உறுதி அளிக்கிறேன் என்று பொருள். திரும்பி வருவேன் என காதலி அளித்த உறுதிமொழிக்காக சாகும் வரை காத்திருந்த காதலனின் கல்லறை மீது முளைத்ததால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.




ஊதுபத்தி, சோப்பு, கூந்தல் தைலம், அரோமா தெரபி, வாசனை திரவியம், மெழுகுவர்த்தி என பல பொருட்களில் குண்டு மல்லியின் எசன்ஸை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி பொண்கள் தலையில் சூடிக்கொள்ளவும் இறை வழிபாட்டிலும் குண்டு மல்லியை பயன் படுவதால் இதற்கு எப்போதும் தேவை இருக்கிறது.



ஆரோக்கியமான தண்டுகளை ஊன்றி புது செடிகள் வளர்க்க படுகிறது. நடவு செய்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் குண்டு மல்லி செடிகள் பலன் கொடுக்க துவங்கும். ஆனால் ஒரு முறை நடவு செய்த செடிகள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும்.



குண்டு மல்லி செடியின் நுனியை ஒடித்து விட்டால் பக்க வாட்டில் கிளைகள் தழைத்து அதிக அளவு பூக்கள் பூக்கும். இலைகள் மஞ்சளாக மாறினால் சத்து குறைவு இருப்பதாக பொருள். 


Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...