Sunday, May 26, 2019

வெண்டைக்காய்




ஆங்கில பெயர்கள்

Okra
Ochro
Ladies finger
Gumbo




மேலை நாடுகளில் இளம் வெண்டைக்காய் இலைகளை பச்சையாகவும் காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தும் சாப்பிடுகிறார்கள்.

வெண்டை விதைகளை காய வைத்து காப்பிக் கொட்டைக்கு மாற்றாக பயன் படுத்துகின்றனர்.

விதைகளை அரைத்து மாவாக பயன் படுத்துகின்றனர்.

உலர்ந்த விதைகளிலிருந்து ஆழ்ந்த மஞ்சள் நிற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதை okra oil என்பர்.




இதிலுள்ள myricetin தசைகள் அதிக அளவு சர்க்கரை சத்தை உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். எனவே நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் வெண்டைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.



வெண்டைக்காயில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

இதில் அதிக அளவு oxalate இருப்பதால் சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.



வெண்டை விதைகளை பஞ்ச கவ்யத்தில் ஊறவைத்து காய வைத்து விதைத்தால் செடிகள் செழித்து வளரும்.

பூ விடும் நேரத்தில் தேங்காய் பால் தெளித்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

வருடம் முழுவதும் வெண்டைக்காய் தேவை எனில் பசுமை குடில் அமைத்து அதில் வெண்டைக்காயை பயிரிடலாம்.


Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...