மாற்று பெயர்
வஜ்ரவல்லி
English names
Devil's backbone, veld grape, adamant creeper,
பிரண்டை வகைகள்
சிறிய கணுக்கள் உள்ளவை பெண் பிரண்டை எனவும் பெரிய கணுக்கள் உள்ளவை ஆண் பிரண்டை எனவும் அழைக்கப்படுகிறது.
சிவப்பு பிரண்டை, தட்டை பிரண்டை, சதுர பிரண்டை, புளி பிரண்டை என பிரண்டையில் பல வகைகள் உள்ளன.
பிரண்டை மருத்துவம்
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல நோய்களை குணமாக்க இந்த பிரண்டை யின் இலை, தண்டு மற்றும் வேர் பயன்படுத்தப்படுகிறது.
வாய்வு தொல்லை, மூலம், ஊளைச்சதை, ஜீரணக் கோளாறு, எலும்பு முறிவு, என பலவற்றிக்கும் பிரண்டை மருந்தாக பயன்படுகிறது.
பிரண்டை சமையல்
பிரண்டை யின் இலை மற்றும் தண்டை பயன்படுத்தி துவையல், தொக்கு, புளிக்குழம்பு, பொடி, வற்றல் செய்து சாப்பிடலாம்.