ஆங்கில பெயர்கள்
Madagascar periwinkle, rose periwinkle, Cape periwinkle, old maid, annual vinca.
மாற்று பெயர்கள்
நயன தாரா, கல்லறை பூ, பட்டி பூ, சுடுகாட்டு பூ, ஸதா புஷ்பம். வெள்ளை நிற பூக்களை நிர்மல் என்பர்.
1960 ஆண்டுக்கு பின் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்த துவக்கிய பின்னர் இந்த தாவரத்திற்கு மவுசு கூடியது.
இந்த செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருட்கள் இரத்த புற்றுநோய், நீரிழிவுக்கான மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது அதிக அளவு ஏற்றுமதி செய்யப் படுவதாலும் தரிசு நிலத்திலும் வருடம் முழுவதும் பயிரிடலாம் என்பதாலும் நித்திய கல்யாணியை பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பொதுவாக நித்திய கல்யாணி மலரில் ஐந்து இதழ்களே இருக்கும். அபூர்வமாக ஆறு இதழ்கள் கொண்ட பூக்கள் பூக்கும்.






