Saturday, February 29, 2020

பலன் பல தரும் புங்கை மரம்




ஆங்கிலத்தில் Indian beech, pongam oil tree என்று அழைக்கப்படும் புங்கை மரத்திற்கு கிரஞ்ச மரம் என்றொரு பெயரும் உண்டு. 


 


இதன் துளிர்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.


புங்கை மரத்தின் மலர்கள்




புங்கை மரமும் சுற்றுச்சூழலும்


வேர்கள் மண் அரிப்பை தடுக்கும் தன்மை கொண்டது.   

 இந்த மரத்தின் வேர் முடிச்சுகள் காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைக்கச் செய்யும் தன்மை கொண்டது.   






 அதிக அளவில் பிராணவாயுவை வெளியிடும் மரங்களில் புங்கை மரமும் ஒன்று.  

 சுற்றுச்சூழலில் உள்ள வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது இந்த புங்கை மரம்.


புங்கையின் மருத்துவ பயன்கள்


புங்க மரப்பட்டை கசாயத்தை மூல நோய் தீர்க்கும் மருந்தாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். 






 தழும்புகள் மறைய, மூட்டு வலி குறைய புங்கமர கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுகிறது.


ஆன்மீகத்தில் புங்கை மரம்



நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருப்புன்கூர் சிவலோக நாதர் கோயில் தலவிருட்சமாக புங்கை மரம் உள்ளது.

Garden clicks

Graceful spurge Obscure morning glory,  small white morning glory.  Ginger plant...